Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிவனுக்கு படைக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா...?

சிவனுக்கு படைக்கக் கூடாத பொருட்கள் எவை தெரியுமா...?
சிவன் என்பவன் எளிமை. யோகி, ஞானி, முற்றும் துறந்தவன். அதனால்தான் அவன் கோவிலுக்கு சென்றுவிட்டு எதனையும் கொண்டு செல்லக் கூடாது. சிவன் சொத்து குலம் நாசம் என்பார்கள்.
அது போலவே சிவனுக்கு இதையெல்லாம் செய்யலாம், இதையெல்லாம் செய்யக் கூடாது என சிவ புராணம் விளக்குகிறது. அதன் அடிப்படையில் நீங்கள் இந்த ஐந்து பொருட்களை சிவனுக்கு படைத்தல் கூடாது.
 
தாழம்பூ: ஒருமுறை பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் யார் பெரியவர் என்ற சண்டை எழுந்தபோது, சிவன் ஜோதிலிங்கமாய் தோன்றி, தன்னுடைய முதலான  தலையை அல்லது முடிவான காலை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவரே பெரியவர் என்று சொல்கிறார்.
 
அதன்படி விஷ்ணு காலை நோக்கியும், பிரம்மா தலையையும் நோக்கி தேடிச் செல்லும்போது, இருவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. இதில் விஷ்ணு தனது  தோல்வியை ஒத்துக் கொள்கிறார். ஆனால் பிரம்மா தான் தலையை பார்த்ததாக, சாட்சிக்கு தாழம்பூவை கொண்டு வருகிறார். அதனால் கோபத்தில் சிவன் பிரம்மாவின் நான்காவது தலையை துண்டித்துவிட்டு, தாழம்பூவை தனக்கு எப்போதும் படைக்கக் கூடது என தாழம்பூவிற்கும் சாபம் விடுத்ததாக சிவபுராணம்  கூறுகிறது. அதிலிருந்து தாழம்பூவினால் சிவனுக்கு பூஜை செய்வதில்லை.
 
துளசி: எந்த கடவுளாலும் தன்னை வெல்ல முடியாதபடி ஒரு வரத்தை விஷ்ணுவிடமிருந்து ஜலந்தர் என்னு அசுரன் பெற்றான். அவனுடைய அட்டூழியத்தை  தாங்க முடியாமல் சிவன் அவனை கொன்று சாம்பலாக்கினார். இதனால் கோபமடைந்த அசுரனின் மனைவி துளசி தன்னுடைய தெய்வீக மலர்களின் மூலம்  சிவனை மறையச் செய்தாள். இதன் காரணமாக துளசியை சிவனுக்கு படைப்பதில்லை.
 
தேங்காய் நீர்: சிவனுக்கு படைக்கும் எந்த பிரசாதத்தையும் நாம் சாப்பிடக் கூடாது. பொதுவாக தேங்காயை கடவுளுக்கு நம படைப்போம். அதனை பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தேங்காயிலிருக்கும் நீரை பிரசாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதேப்போல் மஞ்சள், குங்குமம் இவற்றையும் படைக்க  கூடாது என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆடிக் கிருத்திகையில் கந்தனுக்கு காவடி எடுத்து சிறப்பு வழிபாடு