Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவில் வழிபாட்டின்போது என்ன செய்ய வேண்டும்... செய்யக் கூடாது...?

கோவில் வழிபாட்டின்போது என்ன செய்ய வேண்டும்... செய்யக் கூடாது...?
பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது.
பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்ல கூடாது. கொடிமரம், பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது. கவர்ச்சியான ஆடைகள் அணியக்கூடாது.
 
நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது. ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது. கோவிலுக்குள் உண்ண, உறங்க கூடாது.
 
கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்க கூடாது.
 
அஷ்டமி,நவமி, அமாவசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. தெய்வ வழிபாடு ஈர துணி  கூடாது. கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது.
 
சந்நிதியில் தீபம் இல்லாமல் கும்பிடக் கூடாது. கோவிலுக்கு சென்று வந்தபின் உடனடியாக கால்களை கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகு தான்  கழுவிக்கொள்ள வேண்டும்
 
கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமசிவாய மந்திரம் கூறி வழிபடுவது  மிக சிறந்ததாகும்.
 
கோவிலில் நுழையும் போதும் திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம். ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபட கூடாது. கோவில் உள்ளே உரக்க  பேசுதல் கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-08-2018)!