Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்வம் பெருக செய்யும் குபேர பூஜையை எவ்வாறு செய்வது...?

Advertiesment
செல்வம் பெருக செய்யும் குபேர பூஜையை எவ்வாறு செய்வது...?
குபேர பூஜை: முதலில் சிறிது அரிசி மாவை எடுத்துக் கொள்ளவேண்டும், அந்த மாவினால 9 குபேர கட்டங்களை ஒரு மரப்பலகையில் போட்டுக் கொள்ளவேண்டும். பின்னர் அந்தக் கட்டங்களுக்குள் அரிசி மாவினால எண்களை எழுதவேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள எண் மீதும்,  ஒரு ரூபாய் நாணயத்தைத் தெரியும் வகையில் வைக்கவேண்டும்.
பின்னர், அந்த மரப்பலகை எதிரே லட்சுமி குபேர படத்தை வைக்கவும். நாணயத்தின் மீது மஞ்சள், குங்குமம் வைத்து, குபேர சுலோகம் சொல்லவேண்டும். அவ்வாறு சுலோகம் சொல்லும்போது, ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு பூவை வைக்கவும். மீதமிருக்கும் பூவை குபேர  படத்தின் மீது போடவும்.
 
இந்தப் பூஜையை மிகுந்த பயபக்தியுடன் செய்யவேண்டும். பூஜை முடிந்த பின்னர் கட்டங்களில் உள்ள நாணயங்களை எடுத்து உங்கள் வீட்டு  பீரோவிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ, கல்லாப்பெட்டியிலோ வைத்துக் கொள்ளவேண்டும் அல்லது தொழில் செய்யும்  இடத்திலோ, கல்லாப்பெட்டியிலோ வைத்துக் கொள்ளவேண்டும். இந்த குபேர பூஜையால் செல்வம் பெருகும். வறுமை அகலும்.
 
குபேர மந்திரம்:
 
1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள சர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத  லட்சுமி நாராயண தேவாய நமஹ!
 
2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச குபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ!
 
3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய ஐஸ்வரிய குபேர தேவாய நமஹ!
 
4. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ!
 
5. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ!
 
6. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ!
 
7. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ!
 
8. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ!
 
9. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ!
 
10. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ!
 
11. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ!
 
12. ஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ!
 
13. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ!
 
14. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ!
 
15. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ!
 
16. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூஜைக்கு உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால் நல்லதா கெடுதலா...?