Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமண பொருத்தம் பார்க்கும்போது கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டியவை என்ன...?

திருமண பொருத்தம் பார்க்கும்போது கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டியவை என்ன...?
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் திருமணப் பேச்சு நடத்துகின்ற பொழுது, முதலில் ஜாதகம் பொருந்துகிறதா என்று பார்ப்பதுதான் வழக்கம். நல்ல பொருத்தமாக இருக்கும் பட்சத்தில் மணமகளுக்கும், மணமகனுக்கும் பிடிக்கிறதா என்றும் கேட்டு முடிவு செய்து அதன்பிறகு நிச்சயத்தையோ கல்யாணத்தையோ நடத்த முடிவெடுப்பார்கள்.
நிச்சயதார்த்தம் முடிந்தவுடனேயே முகூர்த்த ஓலை எழுதுகிற பொழுது, மற்ற சுபகாரியங்களுக்கு நாள் குறிப்பார்கள். அவ்வாறு குறித்து  முடித்ததும் அந்த வெள்ளைத் தாளின் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவிக் கொடுப்பதும் வழக்கத்தில் உள்ளது.
 
ஆனால் இதை நினைவில் கொள்ளவேண்டும். முகூர்த்த ஓலை எழுதுகிற பொழுது கீழிருந்து மேல்நோக்கி மஞ்சள் தடவ வேண்டும்.  பெண்ணிற்கு பொருத்தமான மாதவிலக்கு இல்லாத நாளாகத் தேர்ந்தெடுத்து அத்துடன் யோகம், திதி, வாரம், நட்சத்திரம், லக்னம் அனைத்தும்  பார்த்து திருமண ஓலை எழுத வேண்டும்.
 
அதை வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து விநாயகர் படத்தின் முன்னால் நின்று சம்பந்தம் செய்து கொள்பவர்கள் ஒருவருக்கொருவர் தாம்பாளத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். திருமண முகூர்த்தம் குறிக்கும் போது நேர்மறைச் சொற்களை பயன்படுத்தக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (23-11-2019)!