Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறுதி சடங்குகளை பகலில் செய்வதற்கான காரணம் என்ன...?

இறுதி சடங்குகளை பகலில் செய்வதற்கான காரணம் என்ன...?
அனைத்து இறுதி சடங்குகளும் பகல் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும், ஏனெனில் உடலை தகனம் செய்வது முதன்மையானதாகும். ஏனெனில் இரவு என்பது எதிர்மறை சக்திகள் அதிகம் உலவும் மேலும் அவற்றின் பலமும் இரவு நேரங்களில் அதிகம் இருக்கும். இறந்த எதிர்மறை சக்திகள் எப்பொழுதும் மற்ற உடல்களில் நுழைய முயலும். 
எதிர்மறை சக்திகளின் இந்த தாக்குதல்களை தவிர்க்கவே உடல் பகல் பொழுதில் தகனம் செய்யப்படுகிறது. அறிவியல்ரீதியாக கூறும்போது இறந்தவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் நுண்ணுயிர்களின் அளவு அதிகமாக இருக்கும். இது சுற்றி இருப்பவர்களுக்கு எளிதில்  தாக்கக்கூடும். அதனால்தான் உடல் தகனம் பகலில் செய்யப்படுகிறது.
 
மூங்கில்களில் குறிப்பிட்ட ஒலி ஆற்றலை வெளியிடும் தன்மை உள்ளது, இது சுற்றி வரும் தன்மையுடையது. இதில் இருந்து வெளிப்படும்  ஒலி ஆற்றல் இறந்து உடலுக்கு கவசமாக அலைகளை ஏற்படுத்தக்கூடும். மூங்கிலால் செய்யப்பட்ட பாடையில் இருக்கும் போது அந்த உடல்  ஒலி ஆற்றலால் எதிர்மறை சக்திகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.
 
இறந்தவர்களின் உடல் தகனம் செய்யப்படுவதற்கு முன்பு அவர்கள் உடல் தரையில் வைக்கப்பட்டு அந்த உடலின் காலின் பெருவிரல் இரண்டும் சேர்த்து கட்டப்படும். இது உடலின் வலது மற்றும் இடதுபுற ஆற்றல்கள் இரண்டையும் ஒன்று சேர்த்து உடலையே சுற்றி வர  காலின் விரல்கள் கட்டப்படுகிறது.
 
இறந்த உடலை சுற்றி இருக்கும் ஆற்றலை ஒருமுகப்படுத்த பல பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது, அதில் ஒன்றுதான் மண்பானை.  மண்பானையிலிருந்து வெளிப்படும் ஒலி ஆற்றல்கள் மிகவும் வேகமாக பரவக்கூடியவை. மண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் இந்த  வேலையை சிறப்பாக செய்கிறது. உடலை எதிர்மறை சக்திகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க மண்பானை உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (25-11-2019)!