Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்! - இன்றைய ராசி பலன்கள் (27.02.2025)!

Advertiesment
astro

Prasanth Karthick

, வியாழன், 27 பிப்ரவரி 2025 (06:01 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.

மேஷம்:
இன்று குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். நிலம் வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்கி விற்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

ரிஷபம்:
இன்று எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள்.  படித்தால் மட்டும் போதாது. விடைகளை எழுதிப் பாருங்கள். மந்தம், மறதி வரும். தேர்வு நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிற அலட்சியப் போக்கால் மதிப்பெண் குறையும். வியாபாரிகள் கண்டபடி கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டாம். அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மிதுனம்: 
இன்று ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்கு சென்று வர மனம் நினைக்கும். பார்வைக் கோளாறு, பல் வலி வந்துபோகும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்டதூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பணம், நகையை கவனமாகக் கையாளுங்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கடகம்:
இன்று இளைய சகோதரத்துடன் சின்ன சின்ன நெருடல்கள், வேலை கிடைப்பதில் குழப்பம், தகுதியற்ற வேலை,என்று எண்ண வேண்டாம் . உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கப்போகும் காலமிது. உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடர வாழ்த்துக்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்:
இன்று நல்ல தன்னம்பிக்கையுடன் திடமான மனதும் இருக்கும். புதிய தொழில் தொடர்பாக வாழ்க்கைத்துணையுடன் பிரச்னைகள் ஏற்படும். எனவே உண்மை நிலையை அமைதியுடன் சமாளிக்கவும். நீங்கள் யோக, தியானங்களில் மனதை செலுத்துவது நல்ல பலன் தரும். மிகுந்த பலமுள்ளவராகவும் அனைத்து போட்டிகளிலும் ஜெயிப்பவராகவும் இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி:
இன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். எதிலும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். கிடைக்கப் பெற்ற பணத்தை தவறான வழிகளில் முதலீடு செய்ய நேரும். ஆகவே மிகுந்த எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

துலாம்:
இன்று அதிர்ஷ்டமான நாள். மிகுந்த துணிச்சலுடன் பெரிய கம்பெனிகளை ஆரம்பித்து வெற்றி பெறலாம். அரசாங்க வேலைகளுக்கு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம். அலுவலகப் பெண்கள் ஆற்றலை காட்ட நல்ல சந்தர்ப்பம் இது. வெற்றியை எதிர்பாருங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

விருச்சிகம்:
இன்று பற்களில் அதிக தொந்தரவு ஏற்படும். மருத்துவச் செலவு தவிர்க்க முடியாதவை. பண நஷ்டங்கள் தவிர்க்க இயலாதவை. தடைபட்ட விஷயங்களை இப்பொழுது நிகழ்த்தலாம். தோற்றத்தில் கம்பீரம் ஏற்படும். பிள்ளைகளால் தொழில் வழி லாபம் ஏற்படும். நீண்ட பேரங்கள் இப்போது படியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

தனுசு:
இன்று லாபங்கள் இரட்டிப்பாகும். புதிய செயல்களை இந்தக் காலகட்டத்தில் தள்ளிப் போடக் கூடாது. திட்டமிட்டபடி எல்லா செயல்களும் நிறைவேறும் நாள் இது. ஆனால், செயல்களை நிதானமாக செய்யுங்கள். அதிலும் புதிய செயல்களை இன்றே ஆரம்பித்து விடுங்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மகரம்:
இன்று குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்குண்டான மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். குடும்பத்தில் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். அரசின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கும்பம்:
இன்று வாழ்நாள் முழுவதும் ஏற்படவிருக்கும் கஷ்டங்களை அறியாமல் தவறான முடிவுகளில் இறங்க வேண்டாம். புதைபொருள் ஆராய்ச்சியில் உள்ளவர்கள் அரிய முயற்சிகளில் வெற்றி பெறுவர். குடும்பங்களில் குழந்தை பாக்யம் சந்தோஷப்படுத்தும். அரசுத் துறையில் பணி இடை நீக்கம் பெற்றவர்கள் மீட்சி பெறுவர்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மீனம்:
இன்று உடன்பணிபுரிபவர்களை மதித்து நடந்து கொள்வது திடீர் அவமானங்களை குறைக்கும். சீக்கிரமாக மக்கும் அல்லது அழியும் பொருட்களை வியாபாரம் செய்வது நல்ல லாபத்தை தரும். தம்பதியர் அன்னியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் குதூகலமாக கலந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கன்னி!