Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவகிரகங்களில் வலிமையான கிரகம் சனிபகவான்; சனி ஸ்தோத்திரம்!

Advertiesment
நவகிரகங்களில் வலிமையான கிரகம் சனிபகவான்; சனி ஸ்தோத்திரம்!
நவகிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனிபகவான். சனியைப் போல் கொடுப்பவருமில்லை, சனியைப் போல் கெடுப்பவருமில்லை என்பார்கள்.
ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும் சனிபகவான் தருவார். பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின்  வாழ்க்கையிலும் சனியின் விளவுகளை எதிர்கொள்ளும் ஒரு கால கட்டம் வரும். ஏழரை சனி மற்றும் சனி மஹா தசை ஆகியவை ஒரு மனிதனின்  வாழ்க்கையில் சனி கிரகம் தீங்கு ஏற்படுத்தும் காலங்களாகும்.
 
ஜோதிட சஸ்திரப்படி சனிபகவான் ஆட்டிப்படைப்பார் என்ற கருத்தானது தவறானதாகும். ஒருவர் பிரந்த ஜாதகக் கட்டத்தின் பல்வேறு வீடுகளில் சனி கிரகத்தின்  நிலையைப் பொறுத்ததாகும். சனியின் மோசமான அமைப்பு, மனிதனை இன்னல்கள் நிறைந்த ஒரு உலகிற்குள் தள்ளும். ஆனால் ஒரு லாபகரமான அமைப்போ ஒரு மனிதனுக்கு முடிவில்லாத வலங்களையும், வெகுமதிகளையும் பெற்றுத்தரும்.
 
சனி ஸ்தோத்திரம்:
 
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!
 
தமிழில்:
 
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்துப்படி மனைகள் எவ்வாறு இருப்பது நலம் தரும் தெரியுமா...!