Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிரகப்பிரவேசம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்...!

கிரகப்பிரவேசம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்...!
நாம் வாழப்போகும் வீடு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற அதை ஒரு கோவில் போன்றும் இறைவன் வாழும் இடம் என்றும் கருத வேண்டும். அது எப்படி  செய்வது முறை என்று அறிவோம்.
கிரகப்பிரவேசம் செய்யும் முறை:
 
பஞ்சாங்க சுத்தியுள்ள சுபநாளில் மஞ்சளும் பசுமையும் கலந்த வண்ண அழைப்பிதழை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குங்குமத்துடன் கொடுத்து வருவது  நல்லது.
 
கிரகப்பிரவேசத்தை அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் லக்ன முகூர்த்தங்களான 6-7 நேரங்களிலும் வைக்கலாம். காலை 9 மணிக்குப்பிறகு  கிரகப்பிரவேசம் செய்தல் கூடாது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் கிரகப்பிரவேச வழிபாட்டிற்கு 5 மணிக்கு வந்து அவசரமாகவும், ஏனோ தானோ என்று  செய்தல் வேண்டாம்.
 
நாம் வாழப்போகிற இல்லம். பொறுமையாகச் செய்யலாம். ஆடம்பரமான கலாச்சார உடைகளை தவிர்த்து எளிய உடையை (வேட்டி, துண்டு, புடவைகளை)  பூஜை நேரத்தில் உடுத்திக்கொண்டு அமர வேண்டும். வீடு கட்டியிருக்கும் பகுதியில் உள்ள ஒரு கோபுர வாசலில் சாமிப்படம், அரிசி, உப்பு, பருப்பு, குடத்தில் நீர்,  காமாட்சி தீபம், ஐவகை மங்களப் பொருட்கள் மஞ்சள், குங்குமம், கண்ணாடி, தாம்பூலம், தேங்காய் இவற்றுடன் தட்டு வைத்து கற்பூர ஆரத்தி காட்டி மங்கள  வாத்தியங்களோடு வீட்டு வாசலுக்கு தெய்வத்துதிகளைச் சொல்லிக் கொண்டு வந்து பூஜை முறைகளை பின்பற்றுவது நலன் தரும்.

கோ பூஜை: வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கு பொட்டு வைத்து, அதற்கு பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த  கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுக்க வேண்டும்.
 
பால் காய்ச்சுதல்:  புதிய பாத்திரம் வாங்கி, அதற்கு பூ, சந்தனம், குங்குமம் வைத்து பால் ஊற்றி காய்ச்ச வேண்டும். பால் போங்கி வந்த பின் கைகூப்பி வணங்கி அதனை, சாமி படத்தின் முன்பாக வைத்து பூஜை பொருட்களுடன் நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்துவின் அடிப்படை விதிகள் என்ன தெரியுமா?