கடன் பிரச்சனைக்கு தீர்வு தரும் அங்காரக மந்திரம்...!!

Webdunia
செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் பகவானின் யந்திரம் அல்லது திருவுருவப் படத்தின் முன்பு காலை அல்லது மாலையில் விளக்கேற்றி வைத்த பின் சொல்லி வணங்க வேண்டும். 

செவ்வாய் பகவானின் யந்திரம் அல்லது திருவுருவப் படத்திற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூக்கள் தூவி சாம்பிராணி ஏற்றி வைத்து நெய் வேத்தியமாக சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து ஸ்ரீ அங்காரகனை மனதார கீழே கொடுக்கப்பட்டுள்ள  மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.
 
மந்திரம்:
 
அங்காரக மஹீபுத்ர பகவன் பக்த வத்ஸல
நமோஸ்துதே மமாசேஷம் குணமாசு விமோசய
ருணரோகாதிதாரித்ர்ய பாபக்ஷ தபம்ருத்யவ:
பயக்ரோத மன:க்லேசா: நச்யந்து மமஸர்வதா
ருணதுக்க வினாசாய புத்ரஸந்தான ஹேதவே
மார்ஜயாம்யஸிதாரேகா: திஸ்ரோ ஜன்மஸமுத்பவா:
துக்கதௌர்பாக்யநாசாய ஸக ஸந்தான ஹேதவே
க்ருதரேகாத்ரயம் வாம பாதாத் ஸம்மார்ஜயாம்யஹம்
 
அங்காரகனின் யந்திரம் அல்லது திருவுருவப் படத்துக்கு முன்பாக அடுப்புக் கரியினால் கிழக்கு மேற்காக மூன்று கோடுகள் கிழித்து, இந்த மந்திரத்தை சொல்லியவாறு அந்தக் கோடுகளை இடது கையால் அழித்து, செவ்வாய் பகவானை வணங்க கடன் தொல்லைகள் விரைவில்  நீங்கும்.
 
மந்திரத்தின் பொருள்: “பூமியின் மைந்தனும் பகவானும் பக்தர்களின் மீது பிரியம் கொண்டவருமான ஸ்ரீஅங்காரக பகவானே, தங்களை  வணங்குகிறேன். வெகு சீக்கிரம் எனது எல்லாக் கடன்களையும் போக்கியருள வேண்டும். என்னை வாட்டும் கடன், ரோகம் முதலானவை,  தரித்திரியம், பாபம், பசி, அபிமிருத்யு, பயம், கோபம், மனக்கவலை ஆகிய யாவும் அழியட்டும்.
 
கடனால் ஏற்பட்ட துக்கம் விலகுவதற்கும், தொடர்ந்து குழந்தைகள் பிறப்பதற்கும் வேண்டி, முன் ஜன்ம கர்ம வினைப்பாடுகளை அழிப்பதுபோன்று இந்த மூன்று கோடுகளையும் அழிக்கிறேன் (என்றபடி மூன்று கோடுகளையும் அழிக்கவேண்டும்). அத்துடன், ‘மிகுந்த  தேஜஸ்வியும், ஸ்ரீபரமசிவனின் வியர்வையில் இருந்து உண்டானவருமான செவ்வாய் பகவானே, தங்களை வணங்குகிறேன். மிகுந்த கடனாளியான நான் உங்களையே சரணடைகிறேன். எனது கஷ்டங்களை நீக்கி அருளுங்கள்” என மனதார வேண்டிக்கொள்ள  வேண்டும்.
 
இவ்வாறு செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீ அங்காரக பகவானை இந்த மந்திரம் சொல்லி வழிபடுவதால் நமது கடன்கள் யாவும் நீங்கி நன்மை  பயக்கும். இல்லத்தில் தரித்திரமும், வறுமையும் அகன்று குபேர சௌபாக்கியம் உண்டாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments