Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுகப்பிரசவம் நடைப்பெற தினமும் சொல்லவேண்டிய மந்திரம் என்ன தெரியுமா...?

சுகப்பிரசவம் நடைப்பெற தினமும் சொல்லவேண்டிய மந்திரம் என்ன தெரியுமா...?
திருச்சி மலைக்கோடையில் இடைக்கோவிலின் மூலவரான செவ்வந்திநாதர், செட்டிப்பெண்ணுக்கு அவளது தாய் உருவில்வந்து பிரசவம்  பார்த்து தாயுமானவர் ஆனார். 
அந்நாளில் திருவரங்கத்திற்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடையில் காவிரியாறு கரைபுரண்டோடிக் கொண்டிருக்கையில், நிறைமாத கர்ப்பிணியான தன் மகளை திருவரங்கத்தில் விட்டு விட்டுத் திருச்சிக்கு வந்த ஒரு தாயால், காவிரியின் வெள்ளம் காரணமாக திரும்பச் செல்ல இயலாதபோது இறைவனே அத்தாய் வடிவில் அவள் மகளுக்கு மகப்பேறு செய்வித்து தாயையும் சேயையும் காத்தருளினார் சிவபெருமான்.
 
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் இந்த சுலோகத்தை சொல்லி வணங்குவதால், சிவனே தாயுமானவனாக இருந்து காத்தருள்வார் என்றும் கூறப்படுகிறது. இந்த சுலோகத்தை கர்ப்பமாய் இருக்கும் பெண்கள், தினமும் மூன்றுமுறை சொல்லி இறைவன் சிவனை வழிபட்டால்,  அவர்களுக்கு பிரசவத்தில் எந்த பிரச்சனையுமின்றி சுகப்பிரசவம் நிகழும்.
 
மந்திரம்:
 
ஹே சங்கர ஸ்மரஹர பிரமாதி நாத
மன்னாத ஸாம்ய சசிசூட ஹர திரிசூலின்
சம்போ சுகப்ரஸவக்ருத் பவமே தயாளோ
ஸ்ரீமாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (02-12-2019)!