கரூர் அருள்மிகு ஸ்ரீ க.ல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத வெள்ளிக்கிழமை சித்த பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் விமர்சியையாக நடைபெற்றது. வைகாசி மாதத்தின் வெள்ளிக்கிழமை வந்த இந்த சித்த பிரதோஷ நிகழ்ச்சி மிகவும் சிறப்பு என்பதினால் பக்தர்கள் கூட்டம்
அலைமோதியது.
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் முன்பு வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு, வெள்ளி கவசங்கள் கொண்டும், பல்வேறு வண்ண மலர்களினாலும் அலங்கரிக்கப்பட்ட நந்தி எம்பெருமானுக்கு, கோபுர ஆரத்தி, கும்ப ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி, கற்பூர ஆரத்தி ஆகியவற்றைகளை தொடர்ந்து, மஹா தீபாராதனை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து, பக்தர்கள், கரூர் மாவட்டம், மட்டுமில்லாது, திருச்சி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்கள் பல ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு ஈஸ்வரனை நந்தி எம்பெருமானின் நடுவே தரிசித்து தோஷங்களை கழித்து அருள் பெற்றனர். இதற்கான முழு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.