Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்த திரிகளை பயன்படுத்தி விளக்கேற்றுவதால் என்ன பலன்கள்...?

Advertiesment
எந்த திரிகளை பயன்படுத்தி விளக்கேற்றுவதால் என்ன பலன்கள்...?
தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப் பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும் வெண்மை கலந்த பகுதியும், தண்டுப் பகுதியின் உட்கூடும் நன்கு  வெயிலில் காய வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால் முன்வினைக் கர்ம பாபங்கள்  நீங்கும். மறுபிறப்பற்ற நிலை உருவாகும்.
பஞ்சுத்திரி: பொதுவாக பருத்தியினால் திரித்து எடுக்கப்படுகின்ற திரி விளக்குகளுக்கு தீபத்திரியாக பயன்படுத்தப்படுகிறது. இது தெய்வ குற்றம், பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால் விளக்கேற்றுவது  மிகுந்த பயன்தரும்.
 
வெள்ளைத்துணி திரி: வெள்ளைத் துணியாக எடுத்து, அதைத் திரியாகத் திரித்து பயன்படுத்துவதால் பலவித உத்தமமான பலன்களை பெற முடியும். அதிலும் வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய வைத்து, பின்அதைக் காய வைத்து திரியாக திரித்து வைத்துக் கொண்டு  பயன்படுத்துவது மேலும் பலன் தரக்கூடியதாகும்.
 
சிவப்பு வர்ணத்துணி திரி: சிவப்பு துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய பயன்படுத்தப்பட்டால்  திருமண தடை நீங்கும். மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும் பேறு உண்டாகும்.
webdunia
மஞ்சள் துணியாலான திரி: இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம் உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும் அன்பர்கள் பயன்படுத்த  வேண்டிய திரி இது. தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு ஏற்படும் வியாதிகள் தீரவும்,  செய்வினைகள் நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம் பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள் ஒற்றுமைஓங்கவும் இது மிகவும்  பயன்படும் திரி எனலாம்.
 
வாழைத்தண்டு நார் திரி: வாழைத்தண்டினை நன்கு காயவைத்து அடித்து பஞ்சு போலாக்கி பின்பு அதனை திரியாக எடுத்து விளக்கேற்ற பயன்படுத்தலாம். இது முன்னோர்களால் ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மன சாந்தி, குடும்ப  அமைதி, குழந்தைப்பேறு ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.
 
வெள்ளெருக்கந்திரி: வெள்ளெருக்கம் பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து விளக்கிற்கு பயன்படுத்தினால் செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து காப்பாற்றும் பிள்ளைகளின்  நல்வாழ்வு நீடிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (01-06-2019)!