Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – ரிஷபம் | Pongal Special Astrology Prediction 2025

Prasanth Karthick
வெள்ளி, 10 ஜனவரி 2025 (13:24 IST)
பிறக்கும் புத்தாண்டு தமிழர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கலுடன் மகிழ்ச்சி கரமாக தொடங்குகிறது. தனசேர்க்கையின் மாதமான தை மாதத்தில் ராசிகளுக்கான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:
ராசியில்  குரு (வ) -  தைரிய வீரிய  ஸ்தானத்தில் செவ்வாய்(வ), சந்திரன் -  பஞசம  ஸ்தானத்தில் கேது -  அஷ்டம  ஸ்தானத்தில் புதன் -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் -  தொழில்  ஸ்தானத்தில் சுக்ரன், சனி -  லாப  ஸ்தானத்தில் ராஹூ  என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

14.01.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன்  பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
18.01.2025 அன்று  செவ்வாய்  தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
13.11.2024 அன்று  களத்திர  ஸ்தானத்தில்  புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.   
19.01.2025 அன்று  அஷ்டம  ஸ்தானத்தில்  இருந்து  புதன்  பாக்கிய ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
28.01.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
05.02.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன்  லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
ரிஷப ராசியினரே இந்த மாதம் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். குருவின் பார்வையால் அனைத்து தடைகளும் அகலும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும். குழந்øதைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை. குழந்தைகளை வெளிநாடு சென்று படிக்க வைக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.

பெண்களுக்கு உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும்.

அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து உங்களுக்கு சந்தோஷமான செய்திகள் வந்து சேரும்.

கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

கார்த்திகை:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

ரோகினி:
இந்த மாதம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

மிருகசீரிஷம்:
இந்த மாதம் செல்வ சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு  வேலையும் மன திருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை தீபம் ஏற்றி வணங்க பொருளாதார சிக்கல் தீரும். பணவரத்து கூடும். மனம் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: ஜன: 26, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்:  பிப்: 4, 5

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments