Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கார்த்திகை பௌர்ணமியன்று தீபமேற்றி வழிபடுவதன் காரணம் என்ன...?

Advertiesment
கார்த்திகை பௌர்ணமியன்று தீபமேற்றி வழிபடுவதன் காரணம் என்ன...?
முன்னொரு காலத்தில் ஒரு கார்த்திகை பௌர்ணமியன்று, ஒரு சிவாலயத்தில் தீபம் ஒன்று நீண்ட நேரம் எரிந்து திரி கருகி அணையும் தருவாயில் மெல்லியதாக எரிந்து கொண்டிருந்தது. 
அந்தநேரத்தில் அங்கு வந்த எலி ஒன்று விளக்கிலிருந்த திரியை இழுத்துப் போகும் நோக்கத்தோடு அணைந்து போகும் நிலையிலிருந்த அந்த  திரியை இழுத்தது. எலியினால் தூண்டப்பட்ட திரிபிரகாசமாக எரியத் துவங்கியதும் எலி பயந்து ஓடிவிட்டது.
 
கார்த்திகை பௌர்ணமியன்று சிவன் ஆலயத்தில் விளக்கை பிரகாசமாக எரியவைத்து புண்ணியத்தைச் செய்வதால், அந்த எலி அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்ததியாகப் பிறந்து சிறந்து சிவ பக்தராக விளங்கினார். 
 
இறைவனின் கருணையால் தன்முற்பிறவியினை அறிந்த மகாபலி தன் ஆட்சிகாலத்தில் கார்த்திகை தீப விழாவை சிறப்பாக கொண்டடி வந்ததன் பின்னர் அவன் இறைவனின் திருவடியைச் சேரும் காலத்தில், இறைவனை நோக்கி ‘மக்கள் அனைவரும் இக்கார்த்திகை  பௌர்ணமியன்று தீபமேற்றி வழிபட்டு நன்மை அடைய வேண்டும்’ என்று வேண்டினான். அவ்வாறே ஈசனும் வரமளிக்க இன்றும் மக்கள்  அனைவரும் இல்லந்தோறும் தீபமேற்றி வழிபடுகிறோம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (07-12-2019)!