திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
திருமலை ஏழுமலையானுடைய பிரசாதம், உடைந்த மண்சட்டியில் வைத்துப் படைக்கப்படும் தயிர்ச்சோறு ஆகும். இப்படி ஒரு பிரசாதப்படையல், வேறு எந்த கடவுளுக்கும் படைக்கப்படுவதில்லை.
தற்போதுள்ள செயற்கையான பச்சைக்கற்பூரத்தை, தொடர்ந்து சிலவாரங்கள், கருங்கல்லில் தடவினாலே வெடிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இந்த பச்சைக்கற்பூரத்தை, எத்தனைநாட்கள் ஏழுமலையான் சிலையில் தடவினாலும், சிலையில் வெடிப்புகள் ஏற்படுவதில்லை.
ஏழுமலையான் கோவிலில், முன்பு, வெள்ளிக்கிழமை தோறும், அர்ச்சனைக்கு வில்வஇலை பயன்படுத்தப்பட்டது. அதற்கு பதிலாக, தற்போது, மார்கழிமுழுவதும், வில்வ அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. வில்வஇலை சிவஅர்ச்சனைக்குரியது. வில்வம் அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும், ஒரே வைணவஆலயம் ஏழுமலையான் கோவில் மட்டுமே.
திருமலை 3000அடி உயரத்திலுள்ள குளிர்ப் பிரதேசமாகும். ஆனால், ஏழுமலையான் சிலையின் வெப்பம் மட்டும், 110டிகிரி ஃபாரன்ஹீட்டிற்குக் குறைவதே கிடையாது. இது, இன்றளவும் அதிசயமான நிகழ்வாகவே உள்ளது.
ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் கிடையாது; கொண்டாட்டம் மட்டும் உண்டு. உலகிலேயே அரிதான ஒற்றைக்கண் நீலம் என்ற அரிய ரத்தினக்கல், ஏழுமலையான் கோவிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயாகும்.