Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி.எஸ்.பியான மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை… வைரலாகும் புகைப்படம்

Advertiesment
டி.எஸ்.பியான மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை… வைரலாகும் புகைப்படம்
, திங்கள், 4 ஜனவரி 2021 (16:13 IST)
பெற்ற குழந்தைகளைப் படிக்க வைத்து அவர்கள் மேலும் மேலும் உயரிய பல பொறுப்புகளை வகிக்கும்போது அதைப்பார்த்து மகிழும் நல்ல உள்ளம் முதலில் பெற்றோர்தான்.

இந்நிலையில் ஆந்திராவின் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. பெற்ற மகள் உயரதியான நிலையில் தந்தை அவருக்கு சல்யூட் அடிப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஆய்வாளராகப்( Inspector) பணியாற்றி வருபவர் ஷ்யாம்.

இவரது மகள் அதேபகுதிக்கு தற்போ துணைக் கண்காணிப்பாளராக( DSP) புதிதாகப் பொறுப்பேற்றுள்ளார்.

எனவே தனது மகள் தன்னைவிட உயரிய பதவிக்கு வந்துள்ளதால் ஷ்யாம் தனது மகளுக்கு சல்யூட் அடித்தார். இதுகுறித்த புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டி.எஸ்.பி., ஜெஸ்ஸி பிரசாந்தி 2018 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சில் சேர்ந்தவர் ஆவார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி....