Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 12 January 2025
webdunia

கோவில்களில் தரப்படும் பிரசாதங்களை எவ்வாறு வாங்கவேண்டும்....?

Advertiesment
கோவில்களில் தரப்படும் பிரசாதங்களை எவ்வாறு வாங்கவேண்டும்....?
கோவில்களில் பொதுவாக சிவன் கோவில்களில் வில்வ தீர்த்தமும், பெருமாள் கோவிலில் துளசி தீர்த்தமும் கொடுப்பார்கள். ஒரு சிலர் அதை கையால்  வாங்குவார்கள்.

ஒரு சிலர் பிறர் வாங்கியதை தன் கையில் வடித்து விடச் சொல்வர். முறைப்படி எப்படி வாங்க வேண்டுமென்று பலருக்கும் தெரிவதில்லை. அதேபோல, சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்களை வாங்கும் போது தன் கைகளில் உள்ள பிரசாதத்தை வாயினால் கடித்து சாப்பிடுவதை சிலர் வழக்கமாக்கி கொண்டிருக்கிறனர்.
அது மிகுந்த பாவமாகும். 
 
விலங்குகள் தான் வாயினால் கடித்து சாப்பிடக்கூடியவை. ஏனென்றால், அவைகளுக்கு கைகளால் எடுத்து வாய்க்குள் வைத்துக் கொள்ள இயலாது. ஆனால், நமக்கு இறைவன் இருகைகளைக் கொடுத்திருக்கிறான்.
 
அந்த இரண்டு கைகளால் இறைவனை நாம் வணங்கியதற்காக வழங்கப்படுகிற பிரசாதத்தை வலது கையால் வாங்கி இடது கையில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வலது கையால் அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சாப்பிட வேண்டும்.
 
அங்ஙனம், செய்யாதவர்கள் அடுத்த பிறவியில் விலங்காக பிறப்பர் என்று புராணங்கள் சொல்கின்றன. அதுமட்டுமல்லாமல், தீர்த்தம் வழங்கும் போதும் வரிசையில்  நின்று இடது கைக்கு மேல் வலது கையை வைத்து உள்ளங்கையில் தீர்த்தத்தை விடச் சொல்லி வாங்கிப் பருக வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கெட்ட சக்தி நெருங்காமல் காக்கும் வாராகி வழிபாடு !!