Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவில்களில் மணி ஓசை ஒலிப்பதற்கான காரணம் ..

Advertiesment
கோவில்களில் மணி ஓசை ஒலிப்பதற்கான  காரணம் ..
, சனி, 8 மே 2021 (00:35 IST)
மணியின் தயாரிப்பில் ஒவ்வொரு உலோகத்தின் சேர்க்கை அளவினை பொறுத்து நிகழும் அறிவியல் மாற்றம் வியக்கத்தக்கதாய் இருக்கும்.
 
ஆகம விதிகளின்படி, மணிகள் பஞ்சலோகத்திலும் தயாரிக்கப்படும். தாமிரம், வெள்ளி, தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பு என்ற ஐந்து வகை உலோக சேர்க்கை பஞ்ச பூதங்களை  குறிப்பிடுகிறது.
 
மனித மூளையானது வலது, இடது என இருபகுதியாய் பிரிக்கப்பட்டிருக்கும். இரண்டும் இரு வேறு செயல்திறன்களை கொண்டது. இந்த இரண்டையும் ஒன்றாக  இணைக்கும் தன்மை கோவில் மணியில் இருந்து எழும் ஒலிகளுக்கு உண்டாம். அப்படி செயல்படும் விதத்தில்தான் கோவில் மணி தயாரிக்கப்படுகிறது.
 
கோவில் மணியை அடித்ததும் எழும் ஒலியானது எதிரொலியுடன் கூடிய ஆழ்ந்த, இடைவிடாத ஒலியாக உரக்க ஒலிக்கும். ஒலியின் முடிவில் கேட்கும் எதிரொலிகள் நம் காதுகளில் 7 வினாடிகள் நீடிக்கிறது. இது மனித உடலிலுள்ள 7 சக்தி மையங்களான மூலாதாரம், சுவாதிஷ்டனா, மணிபுரம், அனாகதம், விசுத்தம், ஆக்கினை, சகஸ்ராரம் ஆகியவற்றைத் தாக்குகிறது.
 
மணியிலிருந்து எழும் ஓசையில் நாம் “ஓம்” என்ற மந்திரத்தை உணர முடியும். கர்ப்பகிரகத்திலிருக்கும் மணியை, இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போதும்,  இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும்போதும், உணவு படைக்கும் போதும் அடிப்பதுண்டு. 
 
அதுமட்டுமில்லாமல் கோவிலுக்கு போவோர் தங்கள் பிரார்த்தனையை இறைவனுக்கு நினைவுப்படுத்தவும் கோவில்மணியை ஒலிக்கவிடுவதுண்டு. ஒவ்வொரு கோயிலிலும் கர்ப்பகிரகத்தில் உள்ள மணியை அடிப்பதற்காக ஒவ்வொரு சாஸ்திரம் பின்பற்றப்பட்டு வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயனுள்ள சில ஆன்மீக குறிப்புகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...!!