Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கெட்ட சக்தி நெருங்காமல் காக்கும் வாராகி வழிபாடு !!

கெட்ட சக்தி நெருங்காமல் காக்கும் வாராகி வழிபாடு !!
மாலை நேர வழிபாடுகளில் முதன்மையான இடம் உக்ர தெய்வங்களுக்கு உண்டு. வாராகியை மாலை நேரம் தொழும்போது மட்டும் இவள் சக்தியும் பெருகும் நம்  வலிமையும் பெருகும்.

அன்னையானவள் இந்த உலகில் தீய சக்திகளிடமிருந்து நம்மை காத்தருளவே அவதரித்தவள். எதிரி ஏவிவிடும் தீய ஆற்றலை அழிக்கவே உருவெடுத்தவள். 
 
அந்த மாபெரும் ஆற்றல் கொண்டவள் தான் வாராகி, மாந்திரீகம், ஏவல், பேய் பிசாசுகளிடமிருந்து நம்மை காக்கும் வலிமையான தெய்வம் இந்த பிரபஞ்சத்தில் வேறு தெய்வம் ஏதும் இல்லை என்பது தான் உண்மை. 
 
ஏவல், பில்லி சூனியம், யாவையும் தவிடு பொடியாக்கிடவே கையில் உலக்கை வைத்திருக்கிறாள். வாராகி என்ற பெயர் சொன்னாலே இவையாவும் ஓடி ஒளிந்து  கொள்ளும், வாராகி வழிபாடு செய்பவர்களை இந்த கெட்ட சக்தி என்றைக்குமே நெறுங்காது. 
 
கெட்ட துர்சக்திகளிடமிருந்து நம்மை விழுந்து காக்க தான் அன்னைக்கு நாம் இரவு நேர வழிபாடுகளை செய்ய வேண்டும். வீற்றிருப்பாள் நவ கோணத்தில் நம்மை  வேண்டும் என்று காத்திருப்பாள் கலி வந்தனுகாமல் என் கண் கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றகுச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளே என்னை  ஆளும் குல தெய்வம் - என்கிறது வாராகி மாலை.
 
9 வடிவங்களில் வீற்றிருந்து காத்து வருபவளாம் அன்னை கலி என்ற ஒன்று நம்மை நெறுங்காமல் பார்த்து இருப்ப அல்லள் எங்கே நடக்கிறது. என்று இரவு பகலாக,  கண்விழித்து காத்து கொண்டு தன் பக்தனை பாதுகாப்பவளாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாம்பிராணியில் என்னென்ன பொருட்களை கொண்டு தூபமிடுவது நல்லது தெரியுமா...?