தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.
இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
செல்வவளம் பெருகி நிலைக்க பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
செல்வவளம் பெருகி நிலைக்க எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.
செல்வவளம் பெருகி நிலைக்க ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
செல்வவளம் பெருகி நிலைக்க மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.