Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனி பகவானின் முழு பயோடேட்டா பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

சனி பகவானின் முழு பயோடேட்டா பற்றி தெரிந்துக்கொள்வோம் !!
சனீஸ்வரர் நவகிரகங்களில் ஒருவர். இவருக்கு மந்தன் என்றும் சனைச்சரன் என்றும் பெயர்கள் உண்டு. எள்ளும் நல்லெண்ணெய்யும் இவருக்கு உகந்தவை. கணபதி,  அனுமனை வழிபட்டால் சனியின் பாதிப்புகள் குறையும்.

சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்த சூரியகுமாரனே சனி. இவர் யமதர்மராஜனின் சகோதரன். சனி பகவான், ஒரு மனிதனின் ஆயுளை ஆதிக்கம் செய்பவர்  ஆதலால், இவர் ஆயுள்காரகன் என்றும் போற்றப்படுகிறார்.
 
சனி பகவானின் பத்தினியின் பெயர் நீலாதேவி. காகம் இவரது வாகனம். இவர் வாஸம் செய்யும் திசை மேற்கு. சனி பகவானுக்கு உகந்த நிறம் கருநீலம். மனித  உடலில் பித்தம், நரம்பு மண்டலம் ஆகியவற்றை ஆள்பவர் இவர்.
 
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது  பழமொழியாகும்.
 
மகரம், கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
 
சனி பகவானின் திக்கு - மேற்கு.
 
சனி பகவானின் அதிதேவதை : பிரம்மன்
 
சனி பகவானின் பிரத்யதி தேவதை: எமன்
 
சனி பகவானின் ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
 
சனி பகவானின் தலம் - திருநள்ளாறு
 
சனி பகவானின் நிறம் - கருமை
 
சனி பகவானின் வாகனம் - காகம்
 
சனி பகவானின் தானியம் - எள்
 
சனி பகவானின் மலர் - கருங்குவளை, வன்னி
 
சனி பகவானின் வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
 
சனி பகவானின் ரத்தினம் - நீலம்
 
சனி பகவானின் அன்னம் - எள்ளுப்பொடி சாதம்
 
ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரி மந்திரம்: ஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் பலன்கள் !!