Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் செல்வம் பெருக கடைப்பிடிக்க வேண்டியவைகள் என்ன தெரியுமா...!!

வீட்டில் செல்வம் பெருக கடைப்பிடிக்க வேண்டியவைகள் என்ன தெரியுமா...!!
மகாலட்சுமிக்கு இளஞ் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபட வசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும். தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள்.
குடியிருக்கு வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு நெல்லி மரம், விலவ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
 
தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
 
வெள்ளிக் கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயருக்கு  அணிவித்திட பணம் வரும்.
 
முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊறவைத்து பின் அதனை (மறுநாள்) பறவைக்கு மற்றும் பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்துவர பணத்தடை நீங்கும்.
 
வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது. பணம் ஓடிவிடும். பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்யபலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
 
வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும்.  தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும்.
 
அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும். யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற  அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசை தான்.
 
பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம்  தீர்ந்து பணம்வரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லா இறை வழிபாட்டிலும் வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது ஏன்...?