Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்லா இறை வழிபாட்டிலும் வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது ஏன்...?

எல்லா இறை வழிபாட்டிலும் வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது ஏன்...?
வெற்றிலை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களில் ஒன்று. சுப விஷயம் லட்சுமிகரம் பொருந்தியதாக இருக்க வேண்டியே வெற்றிலை முக்கிய இடம் வகிக்கிறது.
பண்டிகைகள், விஷேசம், விரதங்கள், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது. வெற்றிலை, இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆர்றல்  உண்டு.
 
வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுப நிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது.
 
வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் இருப்பதாக தகவல் உண்டு. இறைவனுக்கு எத்த்னை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை.
 
வெர்றிலை பாக்கை வாட விடக்கூடாது. அவை வீட்டுக்கு நல்லதல்ல என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றிலை பாக்கை எப்போதும் வலது  கையால்தான் வாங்கவேண்டும். 
 
மகிமை மிக்கதும், மங்களகரமானதுமான வெற்றிலை, வெற்றியின் அடையாளமாகும். துன்பங்கள் தீர்க்கும் அருமருந்தாகவும் வெற்றிலை  திகழ்கிறது. கோவில்களில் கடவுளுக்கு எத்தனை பலகாரங்களை படைத்து வழிபட்டாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப் பெறுவதில்லை. வெற்றிலையும், பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். 12 ராசிக்காரர்களுக்கும் வெற்றிலையின் மூலம் பரிகாரம் செய்ய கவலைகள் தீரும் என்பது நம்பிக்கை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (13-12-2019)!