Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவக்கிரகங்களுக்குரிய தானியங்களை எந்த நாளில் தானம் தருவதால் பலன்கள் கிடைக்கும்!

Advertiesment
நவக்கிரகங்களுக்குரிய தானியங்களை எந்த நாளில் தானம் தருவதால் பலன்கள் கிடைக்கும்!
பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்கள் எவை தெரியுமா? 1. வாரம் 2. திதி, 3, நட்சத்திரம், 4. யோகம், 5. கரணம் இந்த ஐந்து காரணிகள்தான் பஞ்சாங்கம் என்பது ஐந்து அங்கங்கள் உள்ளடக்கியது. அதாவது பஞ்ச பூதங்களை உள்ளடக்கியது. இந்த பூமியும் பஞ்சபூதங்களால்  கட்டமைக்கப்பட்டது.
பொதுவாக கிரகங்களின் தாக்கங்களைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ வேண்டும் என்றால் அந்த கிரகங்களுக்குண்டான நாட்களில் அந்த கிரகங்களின் தானியத்தால் செய்த உணவுகளை தானம் தருவதன் மூலம் நல்ல பலன்கள் நம்மை வந்தடையும்.
 
சூரியன் -  இவரின் தானியம் “கோதுமை.” எனவே கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக்கிழமையில் தானம் செய்துவர நன்மைகள்  நம்மை வந்து சேரும்,
 
சந்திரன் - இவரின் தானியம் “நெல்.” எனவே “பச்சரிசி”-யில் செய்த உணவுகளை திங்கட்கிழமையில் தானம் செய்துவர நன்மை  கிடைக்கும்.
 
செவ்வாய் - இவரின் தானியம் “துவரை.” எனவே துவரையால் செய்த உணவுகளை தானம் செய்ய வேண்டும். 
webdunia
புதன் - இவரின் தானியம் “பச்சைப்பயறு.” இதை சுண்டல் செய்து தானம் தர நன்மை உண்டாகும். கல்வியாளர்கள், எழுத்துத் துறை  சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், கமிஷன் மண்டி தொழில், ஏஜென்சி தொழில், தரகுத்தொழில், திருமணத்தரகர்கள் இவர்கள் பச்சைப்பயறு  தானங்களை புதன்கிழமைகளில் செய்துவர நன்மை அளிக்கும்.
 
குரு - இவரின் தானியம் “கொண்டைக்கடலை.” இதை வியாழக்கிழமைகளில் தானம் வழங்கினால், நன்மை உண்டாகும். திருமணம், புத்திர  சந்தானம், நல்ல வேலை, தொழில், உயர் கல்வி என அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றித்தருவார்,
 
சுக்கிரன் - இவரின் தானியம் “மொச்சை.” இந்த மொச்சைப் பருப்பை சுண்டல் செய்து வெள்ளிக்கிழமை தோறும் தானம் தர செல்வ வளம்  பெருகும்.
 
சனி - இவரின் தானியம் “எள்.” எனவே, எள் கலந்த உணவை தானம் தர சனியின் அற்புதப் பலன்கள் நம்மை வந்தடையும்.
 
தொழிலாளிகள், உடல் உழைப்பு அதிகம் உடையவர்கள், சேவைசார்ந்த தொழில் செய்பவர்கள், அரசியல்வாதிகள், கடைநிலை ஊழியர்கள், தோல் பொருள் விற்பனை செய்பவர்கள் இவர்களெல்லாம் எள் கலந்த உணவை சனிக்கிழமைகளில் தானம் தர நன்மை பெருகும்,
 
ராகு - இவரின் தானியம் “உளுந்து.” எனவே உளுந்து பருப்பில் செய்த உணவை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தானம் தர  அளப்பரிய நன்மைகள் வந்து சேரும்,
 
கேது - இவரின் தானியம் “கொள்ளு”. எனவே கொள்ளு கலந்த உணவை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தானம் தர தடைகள்  அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீட்டில் வரலட்சுமி விரதம் கடைபிடித்து பூஜை செய்வது எப்படி...?