திருமலா திருப்பதி கோவிலில் ஒரே நாளில், கோடிக்கணக்கான பணம் உண்டியலில் சேர்ந்துள்ளது.
ஆந்திராவில் திருமலா திருப்பதி கோவிலில் அனுதினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மட்டுமே 86,372 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் 7 மணி நேரம் காத்திருந்து எழுமலையானை தரிசித்தனர். திவ்ய தரிசன பக்தர்கள் 3 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர்.
இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை திருப்பதி கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் 3.97 கோடி வசூலாகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதியில் காட்சித் தரும் வெங்கடாசலபதி உலகிலேயே பணக்கார கடவுள் என்ற புகழை பெற்றுள்ள நிலையில் தற்போது ஒரே நாளில் 3.97 கோடி வசூலானதில் திருமலா திருப்பதி தேவஸ்தான போர்டு பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளது.