Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – கடகம்!

Advertiesment
Kadagam

Prasanth Karthick

, புதன், 29 ஜனவரி 2025 (10:08 IST)
கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கி, ராஹூ - லாப ஸ்தானத்தில் குரு (வ) - விரைய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) என கிரகநிலை உள்ளது.

கிரகமாற்றங்கள்:

05.02.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து புதன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.02.2025 அன்று லாப ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
12.02.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் இருந்து சூரியன் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.02.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார் 
26.02.2025 அன்று ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து புதன் களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

கடக ராசியினரே இந்த மாதம் எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.

உத்யோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் அனைத்தும் சுமுகமாக முடிவடையும். அனைவரிடமும் இன்முகத்துடன் பழகுவீர்கள். உங்கள் வேலைகளைப் பட்டியலிட்டு செய்து முடிப்பீர்கள். உழைப்புக்கேற்ற வருமானத்தைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் பாராட்டுகளும் அங்கீகாரமும் கிடைக்கும். பயணங்களாலும் நன்மை அடைவீர்கள்.

வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு பொதுச் சேவையில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கட்சி மேலிடத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு ஏற்படும். தொண்டர்களை அரவணைத்துச் செல்வீர்கள். எதிர்கட்சியினரை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களைத் தேடி வரும். அதேநேரம் எவரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம்.

பெண்மணிகள் இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். வருமானம் திருப்தியாக இருப்பதால் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வீர்கள்.

மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உங்கள் தேவைகளைப் பெற்றோர் பூர்த்தி செய்வார்கள். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அதனால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.
 
புனர்பூசம்:


இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். ஆனால் கடுமையான பணியின் காரணமாக சோர்வு உண்டாகலாம். கவனம் தேவை. குடும்ப விஷயங்களில் ஆர்வம் காண் பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் கவனம் செல்லும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.

பூசம்:

இந்த மாதம் திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். மேலிடத்திலிருந்து பாராட்டு பெறுவீர்கள்.

ஆயில்யம்:

இந்த மாதம் மனக் குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நன்கு நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கை  கூடி வரலாம்.

பரிகாரம்: திங்கள்தோறும் சிவனையும் அம்பாளையும் வணங்குங்கள். மல்லிகையை அம்மனுக்குப் படைக்கவும். மனம் போல் வாழ்க்கை இருக்கும்.
சந்திராஷ்டம தினங்கள் : 1, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 20. 21, 22

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிப்ரவரி மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மிதுனம்!