பிறக்கும் புத்தாண்டு தமிழர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கலுடன் மகிழ்ச்சி கரமாக தொடங்குகிறது. தனசேர்க்கையின் மாதமான தை மாதத்தில் ராசிகளுக்கான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.
துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞசம ஸ்தானத்தில் சுக்ரன், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய்(வ), சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்:
14.01.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சூர்யன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18.01.2025 அன்று செவ்வாய் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13.11.2024 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார்.
19.01.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து புதன் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28.01.2025 அன்று சுக ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் பஞசம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
05.02.2025 அன்று பஞ்சம ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
துலா ராசியினரே இந்த மாதம் சின்ன விஷயங்களுக்கு கூட உங்களுக்கு கோபம் வரலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். எதிர்பாராத பணதேவை உண்டாகும். அதனை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். எதிலும் இழுபறியான நிலை காணப்படும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் கவனம் தேவை.
தொழில் ஸ்தானத்தை செவ்வாய் பார்க்கிறார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். வீண் பகை உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும். கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும்போது கவனம் தேவை.
எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது.
பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களை சாதகமாக செய்து முடிக்க முடியும். எதிர்பார்த்த தகவல் தாமதப்படலாம்.
கலைத்துறையினருக்கு சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம்.
அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண வரவு இருக்கும். தேவையான வசதிகள் கிடைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும்.
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
சித்திரை:
இந்த மாதம் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தலை தூக்கச் செய்யும். எனவே சாதுரியமாக பேசி எதையும் சமாளிப்பது நல்லது. பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ஸ்வாதி:
இந்த மாதம் எந்த ஒரு விவகாரத்தையும் எதிர் கொள்ளும் மன வலிமை உண்டாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. எதிர்பாராத சம்பவங்களால் இழுபறியாக நின்ற காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். நக்ஷத்ராதிபதி ராகுவின் சஞ்சாரம் உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை தரும்.
விசாகம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். போட்டிகள் நீங்கும். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திறமையான செயல்கள் மூலம் பாராட்டு கிடைக்கும்.
பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: பிப்: 6, 7, 8
அதிர்ஷ்ட தினங்கள்: ஜன: 19, 20, 21