கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் - லாப ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கி, ராஹூ என கிரகநிலை உள்ளது.
கிரகமாற்றங்கள்:
05.02.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து புதன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11.02.2025 அன்று தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு வக்ரம் நிவர்த்தி ஆகிறார்.
12.02.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து சூரியன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21.02.2025 அன்று தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் வக்ரம் நிவர்த்தி ஆகிறார்
26.02.2025 அன்று பாக்கிய ஸ்தானத்தில் இருந்து புதன் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
மேஷ ராசியினரே இந்த மாதம் எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம். எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள்.
விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். விளை பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும்.
பெண்கள் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்கள் ஏற்படலாம். சிலருக்கு மேலிடம் பதவிகள் கொடுக்கும். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பணிச்சுமை ஏற்படும். ஒரே நேரத்தில் அனைவருக்கும் வாக்கு கொடுப்பது என்பது கூடாது.
மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.
அஸ்வினி:
இந்த மாதம் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.
பரணி:
இந்த மாதம் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான வேலைகளையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள்.
க்ருத்திகை:
இந்த மாதம் மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும். பல வழிகளி லும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம்.
பரிகாரம்: முழுமுதற்கடவுள் வினாயகரை வழிபட அனைத்து நன்மையே நடக்கும்.
சந்திராஷ்டம தினங்கள் : 20. 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14