Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நவகிரகங்கள் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்கள் உண்டாகும் தெரியுமா...?

Advertiesment
நவகிரகங்கள் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்கள் உண்டாகும் தெரியுமா...?
சூரியன்: ஒருவருடைய ஜென்ம லக்னத்தில் சூரியன் இருந்தால் உஷ்ணதேகமுள்ளவர். பிடிவாத குணமுடையவர். ஜாதகர் சுறுசுறுப்பாக இருப்பார். ஆரோக்கியமாக இருப்பார். தைரிய சாலியாகவும் இருப்பார்.

சந்திரன்: லக்னத்தில் சந்திரன் பலமுடன் காணப்பட்டால் குளுமையாக இருப்பார். அழகாக இருப்பார். அடிக்கடி ஜலதோஷத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார். எப்பொழுதும் கற்பனையில் மூழ்கியிருப்பார். கதை சொல்வதில் வல்லவர், மனைவிக்குப் பிரியமானவராக நடந்து கொள்வார்.
 
செவ்வாய்: கோபத்திற்கு காரகத்துவமான செவ்வாய் லக்னத்தில் இருந்தால், ஜாதகர் முன்கோபியாக இருப்பார். முரட்டு சுபாவமுடையவர். கருணையில்லாதவர். கல்வியில் ஊக்கம் குறையும். 
 
புதன்: லக்னத்தில் புதன் இருந்தால் புத்திசாலியாக இருப்பார். கல்வி கேள்விகளில் சிறந்தவர், ஞானமுள்ளவர், செல்வசேர்க்கை உள்ளவர். சுகமுள்ளவர் சமயோசிதமாக பேசும் வல்லமைப் படைத்தவர் நல்லவர்.
 
குரு: லக்னத்தில் குரு இருந்தால், பல சாஸ்திரங்களை அறிந்தவர், அறிவாளி, பலரும் போற்றும் நிலையை உடையவர். நல்லவர், வல்லவர், சுகமாக வாழக்  கூடியவர். குருவின் அருள் பெற்றவர் தீர்க்காயுள் உடையவர்.
 
சுக்கிரன்: லக்னத்தில் சுக்கிரன் இருந்தால், அழகாக இருப்பார். அமைதியாக இருப்பார். முகவசீகரம் உடையவர். சாப்பாட்டு விஷயத்தில்ஆர்வம் உள்ளவராக  இருப்பார்.
 
சனி: சனி லக்னத்தில் இருந்தால் கருப்பாக இருப்பார். சற்று முன்கோபி சிடுசிடுவென்று இருப்பார். நிறைய கலைகளை கற்றுத் தேர்ந்தவர். மற்றவர்கள் இவரைத் தவறாக நினைத்துக் கொள்ளும்படி பெயர் எடுப்பார். ஞானம் உள்ளவர் உற்சாகமாக இருப்பார். தீர்க்காயுள் உடையவர்.
 
ராகு: இலக்கனத்தில் ராகு இருந்தால் நிறம் சற்று குறைவாகவே ஜாதகர் இருப்பார். ஏதேனும் ஒரு வியாதியால் அவதிப்படுவர் முகத்தில் பல்வரிசை சீராக  இருக்காது.
 
கேது: ஞானம் உள்ளவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம் உள்ளவர். தெய்வீக சிந்தனை உள்ளவர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (10-05-2021)!