சாலி கிராமத்தின் உள் ரகசியமே இந்த திருவல சுழி சக்கரம் தான். இதை வைத்து பூஜிக்கும்போது பிரமிடு, மகாமேரு ஸ்ரீ சக்கரம் தனியாக வைத்து பூஜித்து அடையும் சக்தியை இந்த கோமதி சக்கரம் ஒன்றிலேயே பெறலாம்.
கோமதி சக்கரத்தை வழிபாடு செய்தால் மூன்று லோகத்தையும் வழிபட்ட பலன் கிட்டும். சிவபெருமான் சிரசு முடியின் உச்சி கங்கை சுழியும் நம் தலையில் விழும் சுழியும் இதே திருவல சுழிதான். பசுவின் பார்வை வீட்டில் பட்டால் பல பாவங்கள் விலகும்.
பசுவின் திருஷ்டி சக்தியே இந்த கோமதி சக்கரமாகும். இது வீட்டின் எந்த பாகத்தில் வைத்தாலும் திருஷ்டி விலகும். நாகத்தின் சுழியும் இதுவேயாகும். இந்த சுழியில் நாகலட்சுமி குடிகொண்டுள்ளாள். எனவே நாகதோஷங்கள் விலகிவிடும்.
சிவப்பு வண்ண துணியின் மேல் வைத்து பயன்படுத்தினால் இந்த கோமதி சக்கரம் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும். சகல தோஷமும் கோமதி சக்கரத்தால் மறைந்துவிடும். பகவான் ஸ்ரீமன் நாராயணர் அளித்த திருவல சுழி சக்கரம் உள்ளவரை எத்தோஷமும் நெருங்குவதில்லை.
லிங்க வடிவமுள்ள சாலிகிராமத்தையும், ஸ்ரீ சக்கரத்தையும், வலம்புரி சங்கையும் சுத்தமற்றவர் பூஜித்தால் தரித்திரத்தில் தள்ளிவிடும். ஆனால் திருவல சுழி கொண்ட கோமதி சக்கரம் யார் வேண்டுமானாலும் பூஜிக்கலாம்.
கோமதி சக்கரம் பயன்படுத்தும் போது சுழி ஆகாயத்தை பார்த்தார் போல் வைக்கவேண்டும். பூஜைக்கு பின் எப்படி வேண்டுமானாலும் வைக்கலாம்.
கோமதி சக்கரம் ஆண்டாண்டு காலமாக பலனளிக்கும். கோமதி சக்கரத்தை யார் தலையில் வைத்தும் ஆசிர்வாதம் செய்யலாம். ஸ்ரீராமர் ஆஞ்சநேயர் மூலம் சீதா தேவிக்கு அடையாளம் காட்ட கொடுத்த ரகுவம்ச கணையாழி கோமதி சக்கரம் பதித்தது.