Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (10-05-2021)!

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (10-05-2021)!
, திங்கள், 10 மே 2021 (05:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று குடும்பத்தில் வாக்கு வாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையிடமும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத் துக்கு வழிவகுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 7, 9

 
ரிஷபம்:
இன்று எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. வீண் அலைச்சலும் தடை, தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம்:
இன்று தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 5

கடகம்:
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள். பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 7

சிம்மம்:
இன்று எதிலும் திட்ட மிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

கன்னி:
இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன் படுத்தி சமாளிப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்:
இன்று மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம்:
இன்று கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர் காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரத்தும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 3, 7

தனுசு:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மகரம்:
இன்று குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4

கும்பம்:
இன்று கலகலப்பாக பேசி பழகாமல் ஒதுங்கி இருப்பதை தவிர்த்து அனைவரிடமும் இயல்பாக பேசி வருவது வெற்றிக்கு வழிவகுக்கும். மற்றவர்களின் ஆதரவு கிடைக்க செய்யும். புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 4, 6 

மீனம்:
இன்று செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின்போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2, 7

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-05-2021)!