Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சதுர்த்தி பூஜையை செய்வதால் உண்டாகும் பலன்கள்....!!

சதுர்த்தி பூஜையை செய்வதால் உண்டாகும் பலன்கள்....!!
விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும்.  நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு  மடங்கு அளவில் இருக்க வேண்டும்.


சந்தனம், களி மண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடுவார்கள். 

விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய  அருகல்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி இன்பம் பெருகும்.
 
விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு,  அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.
 
பார்வதி தேவியே கடைப்படித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈஸ்வரனைக் கணவராக அடைந்தார்.
 
ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன், ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடித்து உயர்ந்த நிலை  அடைந்தனர்.
 
விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.
 
சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்து விதமான நலன்களும் பெற்று  மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைக்கும் குளியல் பரிகாரங்கள்!!