Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகாசிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பதால் உண்டாகும் பலன்கள்...!!

Advertiesment
மகாசிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பதால் உண்டாகும் பலன்கள்...!!
மாதந்தோறும் சிவராத்திரி வரும். மாசிமாத தேய்பிறை சதுர்த்தியில் வரும் சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என்றழைக்கப்படுகிறது.


உலகிற்கு ஆதாரமான சிவபெருமான் உலக உயிர்களை படைத்தலும், படைத்த உயிர்களை காத்தலும், காத்த உயிர்களை தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளுதலும் இந்த நாளில்தான்  நடக்குமென்கிறது நம் புராணங்கள். 
 
இதனை லயக்ரம ஸ்ருஷ்டி தினம் எனபர். 'லயம்' என்றால் ஒடுக்குதல். ஸ்ருஷ்டி என்றால் ‘படைத்தல்’. அதாவது படைத்தலுக்கும், அழித்தலுக்குமான விழாவே  'மகா சிவராத்திரி' ஆகும்.
 
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து ஆலகால விஷம் வந்தது. அந்த விஷத்தினை சிவபெருமான் உண்டு  உலகை காத்தருளினார். சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிப்பட்டனர். அந்த நாளே சிவராத்திரி ஆகும். 
 
ஒரு காலத்தில் உலகம் அழிந்து சிவப்பெருமானுள் உலகம் ஐக்கியமானது. இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் பார்வதிதேவி ஆகமவிதிப்படி சிவப்பெருமானை நான்கு  கால பூஜை செய்து வழிப்பட்டாள். பார்வதிதேவி வழிப்பட்டதன் நினைவாகவும் சிவராத்திரி கொண்டாடப்படுது. அந்த இருளில் பார்வதிதேவி பரமனை நோக்கி நான்  எவ்வாறு வழிப்பட்டேனோ அவ்வாறு வழிப்படுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும் எனக்  கேட்டுக்கொண்டாள். அப்படியே ஆகட்டும் என அப்பனும் அருளினார். அதன்படியே "மகா சிவராத்திரி" கொண்டாடப்படுது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் 2020 மாத ஜோதிடப் பலன்கள்: மீனம்