Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் செல்வம் நிலைத்திருக்க என்னவெல்லாம் செய்யக்கூடாது?

வீட்டில் செல்வம் நிலைத்திருக்க என்னவெல்லாம் செய்யக்கூடாது?
வெள்ளிக்கிழமை துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாகும். இந்த நாட்களில் நம்மிடம் உள்ள செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது போன்ற செயல்களால், லட்சுமி நம்மை விட்டு சென்றுவிடுவாள் என்பது ஐதீகம். 

வீடு எந்த அளவிற்கு தூய்மையாகவும், மங்களகரமாகவும் இருக்கிறதோ, அந்த அளவிற்கு திருமகளின் அருளும் அந்த இல்லத்தில் நிறைந்திருக்கும். 
 
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். காலையிலும், மாலையிலும் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றியவுடன் வெளியே செல்லக்கூடாது. பூஜையறையில் சாமி படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும்.
 
வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால், தீய சக்திகள் வீட்டிற்குள் வராது என்பது ஐதீகம். பூஜை முடிந்ததும் பெண்கள் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் குங்குமம் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும். 
 
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கும் முன் குடும்பத் தலைவிதான் முதலில் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்க  வேண்டும்.
 
சாமிக்கு இலையில் வைத்துதான் உணவு மற்றும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது நமக்கு எல்லாவித  செல்வங்களையும் கொடுக்கும் என்பது நம்பிக்கை. 
 
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுப்பது நமக்கு சுபிட்சத்தைக் கொடுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (02-06-2020)!