கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு கேட்ட வரம் தரும் சவேரியார் ஆலய திருவிழா மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான, குறிப்பாக மதம் கடந்து அனைத்து நிலை மக்களும், புனித சவேரியாரின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலங்களில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு கேட்ட வரம் தரும் புனித சவேரியார் பேராலையும் ஒன்று. இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம்-24ம் தேதி துவங்கி சவேரியார் பேராலய திருவிழா பத்து நாட்கள் நடப்பது வழக்கம் அதன்படி இன்று மாலை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.
இராஜாவூர் புனித அதி தூதர் மைக்கேலாண்டவர் தேவாலயத்தில் இருந்து திருக்கொடி,இராஜாவூர் இறை மக்களால்,20-மைல்கள் தூரம் நடைபயண ஊர்வலமாக கொண்டு கோட்டார் புனித சவேரியார் தேவாலய இறை மக்களிடம் வழக்கம் தொன்று தொட்டு இன்றுவரை தொடர்கிறது.
அர்ச்சிக்கப்பட்ட கொடியுடன் ஆலய வளாகத்தில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்னர் கொடியேற்றம் நடந்தது இதனை தொடர்ந்து அமைதி புறாக்கள் பறக்க விடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் திருவிழாவின் போதும் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.
டிசம்பர் நான்காம் தேதி திருவிழாவின் முக்கிய அம்சமான தேர் பவனி நடக்கிறது. அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.