Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? இன்றைய ராசிபலன் (25-11-2023)!

Advertiesment
உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? இன்றைய ராசிபலன் (25-11-2023)!
, சனி, 25 நவம்பர் 2023 (06:00 IST)
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேஷம்:
இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். வீட்டில் வசதி வாய்ப்புகள் பெருகும். தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு திருமணம் இனிதே நடந்தேறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6 

ரிஷபம்:
இன்று குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்தாலும் மகிழ்ச்சியான சூழ்நிலையே நிலவும். பல்வேறு நன்மைகள் நிகழும். உங்கள் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். அதே வேளையில் பொருள் விரையமும் வேலையில் பின்தங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9    

மிதுனம்:
இன்று மிகவும் சிறப்பாகவே இருக்கிறது என சொல்லலாம். பொருளாதார வளமும் பெண்களால் அனுகூலமும் கிடைக்கும். இருந்தாலும் அவ்வப்போது பொருள் இழப்பும், சிறுசிறு உடல் உபாதைகளும் ஏற்படலாம். இவ்வளவு நாட்களாக பிள்ளைகளால் இருந்து வந்த பிரச்சனை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5 

கடகம்:
இன்று வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும் முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6 

சிம்மம்:
இன்று நீங்கள் பட்ட கடன், பிறர் உங்களுக்கு பட்ட கடன் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6 

கன்னி:
இன்று குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9 

துலாம்:
இன்று குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் மறையும். சிலருக்கு திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடப்பதில் தாமதம் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3 

விருச்சிகம்:
இன்று துணிவும் உற்சாகமும் நிறைந்திருக்கும். தாங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியடைய வாய்ப்பிருக்கிறது. தங்களது இளைய சகோதரத்தால் நிறைந்த லாபம் கிடைக்கும். வருமானம் பெருக வாய்ப்பிருக்கிறது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்:  4, 6 

தனுசு:
இன்று நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். கொள்கைப் பிடிப்பில் தளர்ச்சி ஏற்படலாம். தைரியம் பளிச்சிடும். எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். 
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6 

மகரம்:
இன்று ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். வியாபாரிகள் லாபம் ஈட்டுவார்கள். பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியம், கதை, கவிதைத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

கும்பம்:
இன்று தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு். பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7 

மீனம்:
இன்று வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும். தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவன், சக்தியின் அருள் கிடைக்க கார்த்திகை ஞாயிறு விரதம்..!