ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும் நிலையில் தற்போது இந்த ஆண்டு இந்த திருவிழாவுக்கான கொடியேற்ற விழா கோலாக்கலமாக நடந்துள்ளது.
இன்று அதிகாலை 5.20 மணிக்கு ஆவணி திருவிழாவுக்கான கொடியானது கொடி மரத்தில் ஏற்றப்பட்டதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கொடிமரத்திற்கு பால் மஞ்சள் தண்ணீர் உள்ளிட்ட 16 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது என்றும் இந்த அபிஷேகத்தை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் கூடி இருந்தனர் என்றும் குறிப்பிடத்தக்கது.
ஆவணி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அதிகம் கூடியதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது