Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேது தோஷம், நாக தோஷம் போக்கும் சதுர்த்தி விரதம்!

Lord Ganesha
, வெள்ளி, 1 டிசம்பர் 2023 (09:22 IST)
தெய்வ வழிபாட்டில் விநாயகர் வழிபாடு என்பது முதன்மையானதும், தெய்வீகம் பொருந்தியதும் ஆகும். சதுர்த்தி நாளில் விநாயகரை வேண்டி விரதம் இருப்பது பல நன்மைகளை அளிக்கிறது.



சந்திரனின் சுழற்சியை கணக்கிட்டு வரும் திதி சதுர்த்தி எனப்படுகிறது. பௌர்ணமி, அமாவாசைக்கு பிறகு 4வது நாளில் சதுர்த்தி நாள் வரும். இது மூல முதற்கடவுளான விநாயகருக்கு உகந்த நாள். எந்த ஒரு செயலையும் விநாயகரை வேண்டி தொடங்கினால் தொட்டது துலங்கும். கோவில்களிலேயே முதல் கடவுளாக முன்பே காட்சி தருபவர் விநாயகர்.

நவகிரகங்களின் உஷ்ண பார்வையிலிருந்து காக்கும் சக்தி வாய்ந்தவர் விநாயகர். விநாயகருக்கு உகந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்து அருகே உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிறந்த பலனை தரும். முக்கியமாக கேது தோஷம், நாக தோஷம் உள்ளவர்கள் சதுர்த்தி விரதம் இருந்து விநாயகரை வேண்டி வந்தால் தோஷ ரேகைகளில் இருந்து காத்து அருள்புரிவார்.

விநாயகர் எளிமையான தெய்வம் என்பதால் விரதத்தில் எந்த ஆடம்பரமும் தேவையில்லை. காலையில் நீராடி விநாயகர் கோவிலுக்கு சென்று பிரகாரத்தை 11 முறை சுற்றிவந்து வழிபடலாம். அருகம்புல், வெள்ளெருக்கு மாலைகள் விநாயகருக்கு உகந்தவை. அவற்றை விநாயகருக்கு அணிவிக்கலாம்.

நிவேத்தியமாக விநாயகருக்கு பிடித்த மோதகம், அவல் பொரி, கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், கொண்டை கடலை இவற்றில் ஏதாவது ஒன்றை படைக்கலாம்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிகாரர்கள் கவனமுடன் இருக்கனும்... இன்றைய ராசிபலன் (01-12-2023)!