Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாஸ்மாக் விற்பனையை ஊக்குவிக்கும் இயக்கமாக செயல்படுத்தி வரும் திமுக'வில் போதை அணி உருவாகலாம் -தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச். ராஜா!

Advertiesment
டாஸ்மாக் விற்பனையை ஊக்குவிக்கும் இயக்கமாக செயல்படுத்தி வரும் திமுக'வில் போதை  அணி உருவாகலாம் -தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச். ராஜா!

J.Durai

, செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (16:56 IST)
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலுகத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்......
 
தமிழகத்தில் பாஜகவின் உறுப்பினர்களாக இதுவரை 31 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்1கோடி வரை உறுப்பினர்களை சேர்க்க குறிக்கோள் வைத்துள்ளோம்.
 
இந்த உறுப்பினர்கள் சேர்க்கை விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.விருப்பத்தோடு பாஜக'வில் இணைந்து வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு மாநில அரசு நிலம் கையேகபடுத்தி கொடுப்பதில்லை.
 
மத்திய அரசு எவ்வளவு பணம் கொடுக்கவும் தயாராக உள்ளது.
 
காங்கிரஸ் உடன், திமுக சேர்ந்து கொண்டு ஜாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்கின்றனர்.
 
விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு கவனம் செலுத்தி அனைவரும் இணைய செய்ய வேண்டும். இதன்மூலம் பலரும் பயனடைவர்.
 
தற்போது உள்ள கூட்டணி கட்சிகளுடன் பயணித்து கொண்டு உள்ளோம்.வேறு கட்சிகளை சேர்க்க வேண்டும் என்றால் பாஜக தலைமை தான் முடிவு செய்யும்.பாஜக அதிமுக கூட்டணி குறித்து அங்கேயும் கேக்க வேண்டாம்.இங்கும் கேட்க வேண்டாம்.
 
திருமாவளவன் நேற்று முதலமைச்சரை சந்தித்தார். டாஸ்மாக் வேண்டாம் என திட்டவட்டமாக சொல்லி இருக்க வேண்டும். யாரெல்லாம் டாஸ்மாக் மூட வேண்டும் என நினைக்கரவர்களுக்கு ஏமாற்று கின்ற செயலில் திருமாவளவன் ஈடுபட்டு வருகிறார்.
 
தமிழகத்தில் தற்போது 1000 கிளப் திறந்துள்ளனர்.
மக்களை முழுமையாக மோசடி செய்கின்ற வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்டோபர் 2 மாநாடு நடதுவதற்குள் டாஸ்மாக் மூட வேண்டும் என முதலமைச்சரிடம் சொல்லிருக்க வேண்டும். அதை அவர் சொல்ல மாட்டார்.
 
தவேக தலைவர் விஜய் பிரதமருக்கு பிறந்தநாள்,
பெரியார் பிறந்தநாள் தினம் ஆகியவைக்கு வாழ்த்து சொன்னது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எச் ராஜா:
 
பல்லு தேய்த்ததுக்கு அப்புறம் சொன்னால் பார்க்க போகிறமா,விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என கேள்வி எழுப்பினார்.
 
பீகாரை போன்று தமிழகத்திற்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால் சாத்தியம் தான் .தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் குறித்து அண்ணாமலை சொன்னார்.மத்திய அமைச்சரே ஷாக் ஆகிவிட்டார்.
டாஸ்மாக் விற்பனை ஊக்குவிக்கும் இயக்கமாக திமுக செயல்படுத்தி கொண்டுள்ளனர்.
திமுக'வில் போதை அணி உருவாகலாம்.அந்த அளவிற்கு போதை அதிகரித்து கொண்டுள்ளது.
 
ராகுல் காந்தி அமெரிக்காவில் செய்து கொண்டுள்ளது இந்திய விரோத சக்திகளை ஒருங்கிணைப்பது.
இந்தியாவிற்கு எதிராக பேசி வருகிறார்.ராகுல் காந்தி ஆன்டி இந்தியன்.இந்தியாவிற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். 
 
5 கட்சிக்கு அமாவாசை என்பது செல்வப் பெருந்தகைக்கு பொருந்தும்.இந்த ஆட்சியில் தோசை திருப்பும் பக்குவம்,இந்த அரசாங்கம் இப்போ போட்டுள்ள ரோடு அப்படி உள்ளது.
 
ஜி எஸ் டி யால்,பொருட்கள் விலை குறைந்துள்ளது.மத்திய அரசாங்கம் திட்டம் என்பதால் பொய்யான தகவலை  சொல்லி வருகின்றனர்.தமிழக அரசு தீவிரவாத விசியத்தில் கண் மூடி கொண்டுள்ளது.
 
இ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வெக்கமே இல்லையா,அவரே காலாவதியான ஆன பின்பு எம் எல் ஏ வாக ஆகியுள்ளார்.
தன்னைப் பற்றி பேச அவருக்கு அருகதை இல்லை என எச்.ராஜா தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவின் அரசியல் மிகவும் முரட்டுத்தனமானது; மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம்..!