Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்!

Advertiesment
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து  திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்!

J.Durai

, செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (14:25 IST)
கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை கொடிசியா அரங்கில்  தொழில்துறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு தொழில் துறைகளின் குறைகளை கேட்டு அறிந்தார்.
அப்போது கோவை சார்ந்த அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் இனிப்புக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவீதம் வரிவிதிப்பு இருக்கிறது இதனை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அப்போது இவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது.
 
இதை தொடர்ந்து நட்சத்திர ஓட்டலில்  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டது குறித்த வீடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
 
இந்நிலையில் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசனை அவமானப்படுத்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை கண்டித்து கோவையில் இந்தியா கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் கார்த்திக் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாவட்ட தலைவர் கருப்புசாமி, கம்யூனிஸ்ட் பத்மநாபன், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று தளத்தில் பன் மாலைகளை அணிந்தும் சாப்பிட்டும் மத்திய அமைச்சருக்கு எதிராக தோஷங்களை எழுப்பி வந்தனர்.
 
அதேபோல் ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு.. ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!