Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெய்ன் கில்லர்களுக்காக மெடிக்கல்லை உடைத்து பணத்தை திருடிய இளைஞர்… டாட்டூவால் சிக்கிய சுவாரஸ்யம்!

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (10:48 IST)
கீழ்ப்பாக்கம் அருகே உள்ள மெடிக்கல் ஷாப்பை உடைத்து நான்காம் தேதி இரு இளைஞர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளை அடித்து சென்றனர்.

இது சம்மந்தமான விசாரணையில் போலிஸார் ஈடுபட்ட போது சிசிடிவி கேமரா காட்சிகளில் அவர்களின் முகம் ஹெல்மெட் அணிந்திருந்ததால் சரியாக தெரியவில்லை. அப்போது போலிஸாருக்கு ஒரு சிறிய துப்புக் கிடைத்துள்ளது. கொள்ளையர்களில் ஒருவரின் கையில் டாட்டூ இருந்துள்ளது. அதை வைத்து பழைய ஆவணங்களில் ஒப்பிட்ட போது அது பழைய குற்றவாளியான ராஜேஷ் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் இருக்கும் இடத்தை போலிஸார் ட்ராக் செய்துள்ளனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்த அவர்களை கைது செய்ய சென்ற போது அருகில் கூவம் ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.  ஆனால் போலிஸாரும் அவர்களை தொடர்ந்து ஆற்றில் குதித்து அவர்களைப் பிடித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து 55,000 ரூபாய் பணமும் 2 செல்போன்களும் கைப்பற்றப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெய்ன் கில்லர் மருந்துகளை போதை மருந்துகளாக உபயோகிக்க மெடிக்கல்லை உடைத்து மாத்திரைகளையும் பணத்தையும் திருடியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி காட்டுவோம்: ராகுல் காந்தி பதிவு

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? 2026 மார்ச் 16ஆம் தேதி சொல்கிறேன்: பிரேமலதா

தெலுங்கானாவில் சமூகநீதிப் புரட்சி.. தமிழக அரசு விழிப்பது எப்போது? டாக்டர் ராமதாஸ் கேள்வி..!

பட்ஜெட் விலையில் தேவையான அம்சங்களுடன் வெளியான Realme P3 5G!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments