Publish Date: Tue, 07 Sep 2021 (09:40 IST)
Updated Date: Tue, 07 Sep 2021 (09:43 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,30,58,843 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,41,042 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,22,24,937 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,92,864 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.