Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிப்புற இரைச்சல்களைப் பொருள் படுத்துவதில்லை… வெற்றிக்குப் பின் விராட் கோலி

Advertiesment
வெளிப்புற இரைச்சல்களைப் பொருள் படுத்துவதில்லை… வெற்றிக்குப் பின் விராட் கோலி
, செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (09:56 IST)
ஓவல் வெற்றிக்குப் பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அணி வெளிக்காட்டிய ஆக்ரோஷத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஓவல் மைதானத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விஸ்வரூபம் எடுத்து 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸ் முடிந்த நிலையில் கோலியின் கேப்டன்சி மற்றும் அணித்தேர்வு குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் வெற்றிக்குப் பின் பேசிய கோலி ‘ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்து சமநிலையான அணியைத் தேர்வு செய்து விளையாடுகிறோம். அந்த அணியைக் கொண்டே வெற்றிக்காக போராடுகிறோம். புள்ளிவிவரங்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளை வைத்து பேசுவதற்கு வெளியில் பல பேர் உள்ளார்கள். வெளியில் இருந்து வரும் இரைச்சல்களை கவனிப்பதில்லை. ஒட்டுமொத்தமாக அணியினர் காட்டிய ஆக்ரோஷம் வெற்றிக்கு முக்கியமாக அமைந்தது.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்லில் புதிதாக சேரும் இரண்டு அணிகள் பெயர் என்ன? – 6 நகரங்கள் பெயர் பரிந்துரையில்..!