Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பணத் தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

Advertiesment
பணத் தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை : பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
, வியாழன், 2 மே 2019 (14:27 IST)
சமீபகாலமாக உலகில் சகிப்புத்தன்மை குறைந்து பழிவாங்குதல்  நடவடிக்கை அதிகரித்துவருகிறது.  மனிதநேயம் அருகிபோய் குற்றங்கள் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது உயிரை உறையவைக்கும் கொலை சம்பவம் தமிழகத்தில்  நடந்துள்ளது. 
கும்பகோணம் அடுத்த பானாமதுரையில் சுப்பிரமணியம் என்பவர் மளிகைக்கடை நடத்திவந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரிடம் வட்டிக்குக் கடன் வாங்கியதாகத் தெரிகிறது.
 
இந்நிலையில் தான் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டுள்ளார் செந்தில். ஆனால் சுப்பிரமணியம் இதற்கு எதோ கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு, இது முன்விரோதமாக மாறியதாகத் தெரிகிறது.
 
இதனையடுத்து சுப்பிரமணியம் மகன் அருணுக்கும், கடன் கொடுத்திருந்த செந்தில் தரப்புக்கும் இடையே  சமீபத்தில் கடன் சம்பந்தமான வாக்குவாதம் எழுந்துள்ளது. அன்று இரவு மளிகைக் கடைக்குள் புகுந்த ஒருவர் அரிவாளால் காட்டுத்தனமாக அருணை வெட்டினார். அருண் எழுப்பிய சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். ஆனால் அவர்களையும் அவர் வெட்டிவிடுவதாக மிரட்டியுள்ளார்.
webdunia
அதன்பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றதும்  அருணை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில்  அருணின் சடலத்தை உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 
 
இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைத் தேடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிரெண்டாகும் #புறம்போக்குஸ்டாலின்: யார் பார்த்த வேலையா இருக்கும்..?