Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எந்த தெய்வத்தை வணங்கினால் எந்த பிரச்சனை தீரும்....?

Advertiesment
எந்த தெய்வத்தை வணங்கினால் எந்த பிரச்சனை தீரும்....?
நமது பிரச்சனை என்ன என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய தெய்வத்தை வணங்கினால் நமது பிரச்சனைகளுக்கு உடனடி பலன்  கிடைக்கும் என்று பல்வேறு ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
ஒருசில மகான்களிடம் நாம் நமது பிரச்சனையை கூறும்போது, அதற்கு சில தீர்வாக சில தெய்வ வழிபாட்டு முறையை கூறுவார்கள். அதன்படி நாம் வழிபடும்போது நமது பிரச்சனை எளிதாக தீர்வதை கண்கூடாக கண்டிருக்கிறோம். அந்த வகையில் பொதுவாக சில  தெய்வங்களை வணங்கினால் ஒரு சில பொதுவான பிரச்சனைகள் தீரும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
 
ஆகையால் எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பற்றிப் பார்ப்போம்.
 
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர். 
செல்வம் சேர - ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநாராயணர். 
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி. 
கல்வியில் சிறந்து விளங்க - சரஸ்வதி. 
திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை. 
மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி. 
புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி. 
தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கடாசலபதி. 
வீடும், நிலமும் பெற - ஸ்ரீசுப்ரமண்யர், செவ்வாய் பகவான். 
பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீவீரமாகாளி, ஸ்ரீநரசிம்மர் 
நோய் தீர - ஸ்ரீதன்வந்தரி, தட்சிணாமூர்த்தி. 
ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன். 
மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயர். 
விவசாயம் தழைக்க - ஸ்ரீதான்யலட்சுமி. 
உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீஅன்னபூரணி. 
பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லட்சுமி குபேர பூஜை எவ்வாறு செய்வது...?