Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிரெண்டாகும் #புறம்போக்குஸ்டாலின்: யார் பார்த்த வேலையா இருக்கும்..?

Advertiesment
டிரெண்டாகும் #புறம்போக்குஸ்டாலின்: யார் பார்த்த வேலையா இருக்கும்..?
, வியாழன், 2 மே 2019 (14:17 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #புறம்போக்குஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 
 
திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலினை விமர்சித்து #புறம்போக்குஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. பாஜக மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருவதாக தெரிகிறது. 
 
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜகவை குறித்தும் மோடியை குறித்தும் சில விமர்சனங்களை முன்வைத்த நிலையில், பாஜகவினர் பதிலுக்கு இவர்கள் மீது விமர்சனங்கள் முன்வைத்தனர். 
webdunia
அந்த வகையில் பாஜக நாராயணன், பிரதமர் மோடி நாட்டின் காவலாளி அல்ல... களவாணி..!: மு.க.ஸ்டாலின். - அதை புறம்போக்கு சொல்லத்தேவையில்லை என டிவிட்டரில் பதிவிட்டார். இவரின் இந்த அரசியல் நாகரீகமற்ற பதிவிற்கு திமுகவினர் கடும் கண்டங்களை தெரிவித்தனர். 
 
இருப்பினும் இது ஓயாமல் இப்போது ஹேஷ்டேக்காக டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்யை பயன்படுத்தி ஸ்டாலினுக்கு எதிராக கருத்துகளும் மீம்ஸ்களும் பதிவிடப்பட்டு வருகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேள்வி கேட்ட கணவனை கரண்டியால் அடித்த மனைவி !