Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கல்லூரி மாணவி தலையில் கல்லை போட்டு கொன்ற இளைஞர்: சேலம் அருகே பயங்கரம்

Advertiesment
college girl murder
, வெள்ளி, 10 ஜூன் 2022 (09:29 IST)
கல்லூரி மாணவி தலையில் கல்லை போட்டு கொன்ற இளைஞர்: சேலம் அருகே பயங்கரம்
கல்லூரி மாணவி தலையில் கல்லை போட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் சேலம் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சேலம் அருகே கெங்கவல்லி என்ற பகுதியில் கல்லூரி மாணவி ஒருவரை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் அவரது காதலை கல்லூரி மாணவி ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது
 
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கல்லூரி மாணவியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு இளைஞர் கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து இளைஞரை கைது செய்தனர்.
 
முதல்கட்ட விசாரணையில் இளைஞரின் பெயர் சாமிதுரை என்றும் அவர் ஒருதலையாக கல்லூரி மாணவியை காதலித்த நிலையில் தனது காதலை ஏற்காததால் கல்லூரி மாணவியை கொலை செய்ததாகவும் சாமித்துரை கூறியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

86 % இந்தியர்கள் வேலையை ராஜினாமா செய்ய வாய்ப்பு… ஆய்வில் அதிர்ச்சி தகவல்