இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்தில் வழங்கப்பட உள்ள உணவின் மெனு விவரம் வெளியாகியுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் இன்று நடைபெற உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெறும் இந்த திருமணத்திற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த திருமணத்தில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு செல்போன் அனுமதி கிடையாது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று திருமணத்தில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலில் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு இன்று பிற்பகல் கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் இவர்களது திருமணத்தில் வழங்கப்பட உள்ள உணவின் மெனு விவரம்வெளியாகியுள்ளது. அதோடு அங்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டிலில் இருவரின் புகைப்படம் போட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது.