Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”காதல் கதையா… அது கஷ்டம்” … வைரலாகும் இயக்குனர் லோகேஷின் பதில்!

”காதல் கதையா… அது கஷ்டம்” … வைரலாகும் இயக்குனர் லோகேஷின் பதில்!
, வியாழன், 9 ஜூன் 2022 (10:42 IST)
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை கமல் படங்கள் செய்யாத வசூல் சாதனையைப் படைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த வெற்றியின் பூரிப்பில் இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒரு ரசிகர் “முழுக்க முழுக்க ஒரு காதல் கதையை திரைப்படமாக எடுப்பீர்களா?” என்று கேட்க அதற்கு லோகேஷ் “ரொம்ப கஷ்டம் ப்ரோ” என பதிலளித்துள்ளார். தொடர்ந்து ஆக்‌ஷன் கதைகளையே இயக்குனர் லோகேஷ் படமாக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா திருமணத்தில் ரஜினிகாந்த் - ஷாருக்கான்!