Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம்: அமித்ஷாவுக்கு கனிமொழி பதிலடி..!

Mahendran
வெள்ளி, 27 ஜூன் 2025 (11:00 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஹிந்தி மொழி அனைத்து மொழிகளுக்கும் நண்பன் என்று கூறிய நிலையில் அதற்கு பதிலடியாக நீங்கள் உங்கள் மொழியில் பேசிக்கொள்ளுங்கள், நாங்கள் எங்கள் மொழியில் பேசிக்கொள்கிறோம் என்று கனிமொழி எம்பி தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அமித்ஷா, ‘ஹிந்தி எந்த மொழிக்கும் எதிரானது அல்ல என்றும் அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன் போன்றது என்றும் கூறினார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனிமொழி எம்பி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
 
சரியாக சொன்னீங்க. அதையே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்க உங்க மொழியில பேசுங்க, நாங்க எங்க மொழியில பேசுறோம். தனியா ராஜ்பாஷா எல்லாம் தேவை இல்லை. அந்த பெயரை இந்திய மொழிகள் வளர்ச்சி துறைன்னு மாத்திடலாம். என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரையுலகில் 50 ஆண்டுகள்.. ரஜினிகாந்துக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..!

மோடி தொகுதி வாரணாசியிலும் வாக்காளர் மோசடியா? ஒரே தந்தைக்கு 50 மகன்கள்?

இன்னொரு அதிமுக விக்கெட் காலி.. திமுகவில் இணைந்த முன்னாள் எம்பி..!

வியட்நாம் விவசாயிகளை விரட்டியடித்த ட்ரம்ப்! கோல்ஃப் க்ரவுண்ட் கட்ட திட்டம்!

மீண்டும் ஓட்டுனர் உரிமை வழங்க டிடிவி வாசன் மனு.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments